சென்னை: முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு, முதல் முறையாக ஜூன் 17ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் பல முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் மனுவாக கொடுத்தார். மேலும், மேகதாது அணை பிரச்சினை குறித்து விரிவாக எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், அந்த திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வலியுறுத்துமாறும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.
குடியரசு தலைவருடன் சந்திப்பு
இந்நிலையில், இரண்டாவது முறையாக நேற்று (ஜூலை 18) மாலை 5 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி சென்றார்.
கடந்த முறை பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த முறை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோரும் செல்கின்றனர்.