சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 10.:30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கவுள்ளது. இதில், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் ஆகியவை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தின்போது, தென் மாவட்டங்களில் முதலீட்டை அதிகரிக்கும் வகையிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும் தொழில்துறை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய தொழில் தொடங்க நிறுவனங்களுக்கான அனுமதி, விரிவாக்கம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் நட்டுவைத்த இருவர் மீது வழக்குப்பதிவு