தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு நிகழ்வுகளில் 3 பேர் மரணம்: முதலமைச்சர் இரங்கல் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் மரணமடைந்த மூவரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

By

Published : Aug 20, 2020, 1:02 AM IST

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்பவரின் கணவர் சரவணக்குமார், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, எதிர்பாராதவிதமாக மரம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் தாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த காவேரி என்பவரது மகன் மாரியப்பன் மரத்தில் ஏறி கிளைகளை வெட்டும் போது, தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னை புரசைவாக்கம் வட்டம் வ.உ.சி கிராமத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரின் மகன் செல்வன் ரியாஸ் தேநீர் வியாபாரத்தின் போது தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த மூன்று இறப்பு செய்திகளையும் அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details