திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. 10 நாள்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ஆம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான வாகன வசதி, குடிநீர், மருத்துவம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவைகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மகேஷ், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:பாதுகாப்பு அச்சுறுத்தல் : பா.ஜ.க. தலைவர்கள் 4 பேருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு