சென்னை:உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது. அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ஒரு முழுமையான போட்டியை பார்க்க முடிந்தது. பிரான்ஸ் மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் என்ற மனப்பான்மை இந்த போட்டியை உலகக் கோப்பையின் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
அர்ஜென்டினா அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - அர்ஜென்டினா அணி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜென்டினா மற்றும் மெஸ்சிக்கு எனது வாழ்த்துக்கள். மார்டினசுக்கு சிறப்புப் பாராட்டுச் சொல்லியாக வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்தது. இறுதி போட்டியில் நேற்று (டிசம்பர் 18) அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. 2 அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:'ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே'- பள்ளி பருவத்தை நினைத்து உருகிய முதலமைச்சர் ஸ்டாலின்