தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை ஒத்திவைப்பு.. தமிழக பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

K annamalai: அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 6-ஆம் தேதி கோவையில் தொடங்கவிருந்த இருந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை அக்.16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைமை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 8:14 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்குப் பின்னர் கே.அண்ணாமலை கடந்த 1-ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்று நேற்று(அக்.03) இரவு சென்னை திரும்பினார்.

அண்ணாமலை டெல்லி சென்றதால் ஏற்கனவே அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற இருந்த பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டம் அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறும் என்றும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் மீண்டும் கோவையில் என் மண், என் மக்கள் யாத்திரையை அண்ணாமலை தொடங்குவார் என்றும் பாஜக தரப்பு தெரிவித்தது.

இந்தச்சூழலில் அண்ணாமலையின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டதால் யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக, "மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயணம் அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருத்தப்பட்ட நடைப்பயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? - அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details