தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீங்கள் இப்படித்தான் ஆரம்பிப்பீங்க' - பாஜகவுக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி! - மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வு

பொது நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மறுபரீசிலனை செய்ய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்தார். அதற்கு 'நீங்கள் இப்படித்தான் ஆரம்பிப்பீங்க. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது இப்படி தான் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்னீர்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை உள்ளது' என்று பதிலளித்து அமைச்சர் பொன்முடி பேசினார்.

பொன்முடி
பொன்முடி

By

Published : Apr 11, 2022, 8:25 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.11) பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பொது நுழைவுத்தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மறுபரீசிலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "நீங்கள் இப்படித்தான் ஆரம்பிப்பீங்க, நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது இப்படித்தான் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்று சொல்லி ஆரம்பித்தீர்கள். நாங்கள் இப்போது அதை தடுத்து கொண்டிருக்கிறோம். இதை விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது. அதனால், அதை தடுத்து நிறுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை உள்ளது" என்று பேசினார்.

இதையும் படிங்க:மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து தீர்மானம்

ABOUT THE AUTHOR

...view details