தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணை அடிப்படையில் பணி.. அரசு விடுத்த வார்னிங்!

பணியின் போது மரணம் அடைந்த அரசு ஊழியர்கள் 32 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.

பணியின் போது மரணம்:32 பேருக்கு  கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை!
பணியின் போது மரணம்:32 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை!

By

Published : Nov 8, 2022, 4:26 PM IST

Updated : Nov 8, 2022, 4:57 PM IST

சென்னை:சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை நலத்துறை அலுவலகத்தில், பணியின் போது மரணம் அடைந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 32 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ”திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1145 பேருக்கு வேளாண்மை துறையில் பணி வழங்கபட்டு இருப்பதாகவும், அதில் கருணை அடிப்படையில் மட்டும் 148 பேருக்கு வழங்கபட்டுள்ளது. 28,728 ஏக்கர் விவசாய நிலங்கள் மழை நீரில் சூழப்பட்டு இருப்பதாகவும், இதில் நெல், கரும்பு, சிறு தானியங்கள், பருத்தி உள்ளிட்டவை பாதிக்கபட்டுள்ளதாகவும், 33 சதவீதம் பயிர் பாதிக்கபட்டிருந்தால் கணக்கில் எடுத்து நிவாரணம் வழங்கபடும். இதற்காக 5908 அதிகாரிகள் நியமனம் செய்யபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 2.45 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர் ஆனால் இந்த ஆண்டு 5 லட்சம் பேர் பயிர் காப்பீடு செய்துள்ளதாகவும், மரபணு மாற்றபட்ட கடுகுக்கு தடைவிதித்து இருப்பதாகவும், மக்களின் நிலைபாடு தான் அரசின் நிலைபாடு என்றும் சின்ன வெங்காயம் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, ”32 பேருக்கு கருணை அடிப்படையில் தாய், தந்தையின் பணியை வாங்கியுள்ளனர். இந்த வேலை கிடைப்பது கடினம் எனவும் TNPSC மூலம் தான் பணி இப்பணி கிடைக்கும். நீங்கள் பின் கதவு வழியாக அரசு வேலைக்கு வருகிறீர்கள். சொகுசாக வாழ்ந்தவர்கள் நீங்கள், சிறப்பாக பணியை செய்து தாய், தந்தை பெயரை காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் 2 ஆண்டுகளில் பணியை விட்டு நீக்கப்படுவீர்கள்” இவ்வாறு எச்சரிக்கையுடன் கூறினார்.

இதையும் படிங்க:EWS 10% இட ஒதுக்கீடு: வரும் நவ.12-ல் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக்கூட்டம்

Last Updated : Nov 8, 2022, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details