கட்டாயத் தமிழ் மொழி கற்றல் சட்டத்தை தமிழக அரசு கடந்த 2006ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அதன்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிறமொழி தேர்வுகளின் போது, தமிழ் பாடத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் தேர்வு எழுத 3ஆண்டு விலக்கு- உயர் நீதிமன்றம்
சென்னை: மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2015-16ஆம் கல்வியாண்டில் பிறமொழி மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் வரும் கல்வியாண்டிலும் விலக்களிக்கக் கோரி மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், அப்துல் குத்தாஸ் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் பாடத் தேர்வு எழுத 2022ஆம் ஆண்டு வரை விலக்களித்து உத்தரவிட்டனர்.