ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பிப்ரவரி 14ஆம் தேதி, பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், பாதுகாப்புப் படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இருவரும் பலியாகினர்.
'புல்வாமா தாக்குதல்... தமிழ்நாடு வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி' - தமிழக காங்கிரஸ்
சென்னை: புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தமிழ்நாடு வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நிதியுதவி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த தமிழ்நாடு வீரர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தற்போது நிதியுதவி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்ததாவது,
"ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த 40 வீரர்களில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.