சீனாவில் பரவிய கரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையமான தாம்பரம் ரயில் நிலையத்தில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்கு 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்துசெல்கின்றனர்.
எமதர்மராஜா வேடம் அணிந்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு இதனால், இங்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரயில்வே ஆர்.பி.எப். காவலர்கள் சார்பில் கரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சி.ஆர்.எப் காவலர்கள் எமதர்மராஜா, சித்திரகுப்தர் வேடம் அணிந்து ரயில் நிலையத்தில் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது பயணிகளிடையே வரவேற்பை பெற்றது.
ரயில்வே காவல்துறையினர் செய்தியாளர் சந்திப்பு மேலும், சுகாதாரப் பணியாளர்கள் ரயில் நிலைய நடைமேடை, ரயில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ரயில்வே ஊழியர்கள் முகக்கவசம் அணிந்தபடி பணியாற்றிவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 அறிகுறியுடன் வந்த ஒடிசா இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!