கரோனோ பரவலால் இந்தாண்டு ஜூன் மாதம் திறக்கப்படவில்லை. இதனால் 2020-2021ஆம் கல்வியாண்டு முடங்கியுள்ளது. மேலும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முழுமையாக பாடப்பகுதிகளை முடிக்க முடியாதநிலை உள்ளது. பாடத்திட்டங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு கற்பிக்க தேவையான கால அளவுகள் கிடைக்காது. மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதற்கான கால அளவும் நிர்ணயம் செய்து புத்தங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மத்திய அரசு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பெற்றோர் ஒப்புதலுடன் மாணவர்கள் பள்ளிக்குச் வருகைபுரிந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் பணிகளில் ஏற்ப்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய பள்ளிக்கல்வித்துறைப் ஆணையர் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் பாடப்பகுதிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து தற்போது 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தை குறைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாடத்திட்ட குறைப்பு பணிகளை மாநில கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நிறைவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்புகள் பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.