தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்ஜெட்டில் இளைஞர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்து எம்.எஸ். சுவாமிநாதன் பேச்சு - இளைஞர்களை விவசாயத்திற்கு ஊக்குவிக்க புதிய திட்டம்

சென்னை: இளைஞர்களை விவசாயத் தொழிலுக்குள் ஈர்க்கும் வகையில் இன்று அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

swaminathan_
swaminathan_

By

Published : Feb 1, 2020, 3:29 PM IST

மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். இந்திய பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது.

வேளாண் துறையை முன்னேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும் என விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பட்ஜெட்டின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.


இந்நிலையில், மத்திய அரசின் நிதிநிலை திட்ட அறிக்கை குறித்து, ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவனர் எம்.எஸ். சுவாமிநாதன் பேசுகையில், ”மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இளைஞர்கள் அதிகளவில் விவசாயத்திற்கு வரவேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் பொருளாதாரம் மேம்படும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன்

முக்கியமாக இந்த அறிக்கையில் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயம் முன்னேற்றமடையும். அரசோடு இணைந்து விவசாயிகளும் வேளாண் விஞ்ஞானிகளும் இணைந்து இந்தியாவில் உணவு உற்பத்தி மட்டுமல்லாமல் விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை வளர்த்தல், மீன்வளம் உள்ளிட்டவற்றையும் மேம்படுத்த வேண்டும். மேலும் கடலோரப் பகுதியில் வாழும் மீனவர்களுக்கான மீன் வளர்ப்புத் தொழிலையும் மேம்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டிய ’பூமி திருத்தி உண்’ வரியின் விளக்கம்?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details