சென்னை:நேபாளத்தைச் சேர்ந்த பிரேம், அவரது மனைவியுடன் அண்ணாநகரில் புதிதாக கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிரேம் நேற்று (மார்ச் 24) இரவு, குடியிருப்பின் இரண்டாவது தளத்தில், சந்தேகமான முறையில் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட தடத்துடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மர்மான முறையில் உயிரிழந்து கிடந்த காவலாளி... போலீசார் விசாரணை - சென்னை மர்மான முறையில் உயிரிழந்து சிடந்த காவலாளி
சென்னை அண்ணாநகரில், வீட்டு காவலாளி சந்தேகமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்மான முறையில் உயிரிழந்து கிடந்த காவலாளி
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பிரேமின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நண்பர்களுக்கு போதைப்பொருள்கள் விநியோகம் - பட்டதாரி இளைஞர் கைது