மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா முன்வைத்த சில கருத்துகள் விவாதங்களை ஏற்படுத்திவந்த நிலையில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'காப்பான்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நடிகர்கள் கல்விக் கொள்கை குறித்த தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அரசியல் தலைவர்கள் சிலரும் சூர்யாவிற்கு ஆதரவாகவும், கல்விக்கொள்கைக்கு எதிராகவும் தங்களது கருத்துகளை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்துவருகின்றனர். அவற்றின் தொகுப்பு...
நடிகர் ரஜினிகாந்த்
- புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது மோடிக்கு கேட்டுவிட்டது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.