தமிழ்நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டுகிறது. இந்நிலையில், தற்போதைய நிலைமையை "அன்றே கணித்த ரஜினிகாந்த்" என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமாட்டேன் என அறிக்கை வெளியிட்டிருந்தார். அதிலிருக்கும் சில வரிகளைத் தான் ரசிகர்கள் ட்ரெண்டாக்கிவருகின்றனர். அதில், "இந்தக் கரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்துகொண்டிருக்கிறது.
அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. நான் உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
ட்ரெண்டாகும் அன்றே சொன்ன ரஜினி ஹேஷ்டேக் தற்போது, ''அன்றே சொன்ன ரஜினி'' என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடை