தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு! - superident of police appointent for seprated new districts

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு காவல் துறைக் கண்காணிப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Goverment order

By

Published : Nov 15, 2019, 5:44 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியைப் பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டையும், விழுப்புரத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியையும், வேலூரைப் பிரித்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் என புதிய ஐந்து மாவட்டங்களை உருவாக்கி, அண்மையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

பணியிட மாற்ற அரசாணை

அதனடிப்படையில், அந்த மாவட்டங்களுக்கு புதிய காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தென்காசி மாவட்டத்திற்கு சுகுணா சிங்கும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மயில் வாகனமும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விஜயகுமாரும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கண்ணனும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஜெயச்சந்திரனையும் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details