தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பண மோசடி விவகாரம் - அமைச்சருக்கு சம்மன் - சென்னை அண்மைச் செய்திகள்

பண மோசடி விவகாரம் தொடர்பாக, வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பண மோசடி விவகாரத்தில் அமைச்சருக்கு சம்மன்
பண மோசடி விவகாரத்தில் அமைச்சருக்கு சம்மன்

By

Published : Aug 9, 2021, 10:24 PM IST

சென்னை: கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில், தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது இளைஞர்களிடம் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதில் ஏற்கனவே இரண்டு வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைக்கு, ஆகஸ்ட் 11 ஆம் தேதி மதுரையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு இன்று (ஆக.9) சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வெள்ளை அறிக்கை- சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன்- ஓபிஎஸ் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details