சென்னை: மகாகவி பாரதியாரின் 101ஆவது நினைவு தினத்தையொட்டி, மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மகாகவி பாரதியாரின் நினைவு நாளைப் போற்றுவதில் பெருமை கொள்கிறேன். தற்போது ராணுவ உடைகள் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டு, நம் நாட்டிலேயே ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவரது கவிதைகளில் சுயசார்பு இந்தியா குறித்து பேசியிருந்தார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்பு, அவர் என்ன சுயசார்பு இந்தியாவைக் கனவு கண்டாரோ, அது தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.