தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி விவகாரம் குறித்த சர்ச்சை பேச்சு: இயக்குநர் பாக்யராஜ் மீது புகார் - பொள்ளாச்சி பாலியல்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவத்திற்கு பெண்கள் தான் காரணம் என பேசிய இயக்குநர் பாக்யராஜை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

sudesi-womens-activist-complaint-against-director-bhagyaraj
sudesi-womens-activist-complaint-against-director-bhagyaraj

By

Published : Nov 28, 2019, 3:45 PM IST

கருத்துகளை பதிவு செய் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 25ஆம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அதில் ஊசி இடம் தராமல் நூல் நுழையாது என்றும், பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு பெண்கள் தான் காரணம் எனவும் அவர் பெண்களைப் பற்றி அவர் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் பாக்யராஜ் மீது தமிழ்நாடு சுதேசி பெண்கள் சங்கம் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாக்யராஜ் மீது சுதேசி பெண்கள் சங்கம் புகார்

இதுகுறித்து பேசிய சுதேசி பெண்கள் சங்க நிர்வாகிகள், ஒட்டு மொத்த பெண்களையும் பாக்யராஜ் குறை கூறி இருப்பது வேதனை அளிக்கிறது. ஒட்டு மொத்த பெண்களின் கவுரவத்தை இழிவாக பேசியுள்ள பாக்யராஜை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க...

அகில உலக சூப்பர் ஸ்டாரின் 'சுமோ' - புது அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details