தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரமற்ற உணவு: மேலும் 5 உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நிற்கத் தடை - தரமற்ற உணவு வழங்கிய உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நிற்க தடை

விக்கிரவாண்டி அருகே சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை விற்று வந்த ஐந்து உணவகங்களில் அரசுப்பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
அமைச்சர் ராஜகண்ணப்பன்

By

Published : Jan 26, 2022, 3:36 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் அரசுப்போக்குவரத்துக் கழகப்பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள், கடைகளில் தரமற்ற உணவுகள் வழங்குவதாகவும், கூடுதல் விலைக்கு விற்பதாகவும் புகார் எழுந்தன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின்பேரில் நேற்று(ஜன.25) மாமண்டூர் பயணவழி உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அரசுப்பேருந்துகள் உணவுக்காக நின்று செல்லத் தடை விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் போக்குவரத்துக்கழக அலுவலர்கள் குழு, அரசுப்பேருந்துகள் நின்று செல்லும் நெடுஞ்சாலை தனியார் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

5 உணவகங்களின் பெயர்கள் இதுதான்

அதில் விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்று வந்தது சோதனையில் தெரியவந்தது.

இந்த உணவகங்களில் அரசுப்பேருந்துகள் நின்று செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்களில் அரசுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நின்று செல்வதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி மாலை அறிவிப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details