சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''வேறு மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாடு பாஜக, பணிகள் எதுவும் செய்வதில்லை. திமுக, அதிமுக என கூட்டணி வைத்து அரசியல் செய்யக் கூடாது. பாஜக தனியாக நிற்க வேண்டும். எல்லா தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி வைத்தால் தான் பாஜக வளர்வதாக அர்த்தம்.
திமுக கொள்கை வழியாக எதுவும் இல்லை. நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பதற்காக பேசிக் கொண்டே இருக்கும். ஆனால் தேர்தல் வரும்போது வேறு மாதிரியாக பேசுவார்கள். தமிழ்நாட்டில் ஒரு முறை ஆட்சியை கலைத்தேன். அப்போது, ரத்த ஆறு ஒடும் என்றார்கள். ஆனால், பூனை குட்டி கூட வெளியே வரவில்லை. கோயில்களில் அராஜகம் செய்தால் தட்டிக் கேட்பேன். கோயில் பூசாரிகளுக்கு திராவிடர் கழகம் மூலமாக தொல்லை இருப்பதாக கூறப்படுகிறது.