தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிகளவில் பிராமணர்கள் பாதிப்பு - ஆளுநருக்கு சுப்பிரமணியசாமி கடிதம்!

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், பிராமணர்கள் அதிகளவில் தாக்கப்படுவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Subramanian Swamy
சுப்பிரமணிய சாமி

By

Published : May 29, 2021, 1:40 PM IST

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர், "தமிழ்நாட்டில், தற்போதுள்ள பதற்றமான சூழ்நிலையை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சமீபத்தில் பொறுப்பேற்ற திமுக., அரசின் ஆதரவு காரணமாக, இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிராமணர்களை குறி வைப்பதும், அவர்கள் மீது வார்த்தை தீவிரவாத தாக்குதல் நடத்துவதும், ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசின், தொடக்க கால நிகழ்வை ஒத்திருக்கிறது.

தமிழ்நாட்டில், ஆசிரியர்கள் மற்றும் பூசாரிகள் குறி வைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் பிராமணர்கள். தற்போதைய பதட்டமான சூழல் குறித்து, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு, தி.மு.க.,வில் உள்ள சிலர், விடுதலை புலி ஆதரவாளர்கள் காரணம்.

புதிய அரசு பொறுப்பேற்று, தன் பணியை தொடங்கும் ஆரம்ப நிலையில், இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டப்பிரிவு, 356ஐ பயன்படுத்த வேண்டும் எனக்கூற இயலவில்லை; எனினும், இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தலைமை செயலரை அழைத்து, பிராமணர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என, அறிக்கை கேட்க வேண்டும். அவரை ஆலோசித்து, அந்த அறிக்கை மீது, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நீங்கள் எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details