தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிங்கப்பூர் மாநாடு குறித்து மனம்திறந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் - cm mk stalin

சிங்கப்பூரில் கடந்த 7ம் நடைபெற்ற ’வேர்ல்ட் ஒன் ஹெல்த் காங்கிரஸ்’ எனும் மாநாடு குறித்து சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.

வேர்ல்ட் ஒன் ஹெல்த் காங்கிரஸ் மாநாடு குறித்து மா.சுப்பிரமணியம் பேட்டி
வேர்ல்ட் ஒன் ஹெல்த் காங்கிரஸ் மாநாடு குறித்து மா.சுப்பிரமணியம் பேட்டி

By

Published : Nov 11, 2022, 7:59 PM IST

Updated : Nov 11, 2022, 11:08 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது கூறியதாவது, 'சிங்கப்பூரில் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை வேர்ல்ட் ஒன் ஹெல்த் காங்கிரஸ் எனும் தலைப்பில், மருத்துவத்துறை சார்பில் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாடு கடந்த 7ஆம் தேதி சிங்கப்பூரில் நடந்தது.

மேலும், உலக சுகாதாரத்துறை அமைப்பு இயக்குநர் டாக்டர். டெட்ராஸ் அதானம் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு மருத்துவ பல்கலைக்கழகங்களில் இருந்து மருத்துவ வல்லுநர்கள் தங்களின் ஆராய்ச்சிக்கான குறிப்பிடுகளைப் பதிவு செய்து பேசினார்கள்.

பின்னர் 8ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியை தமிழ்நாடு சார்பாக தொடங்கி வைக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அங்கு சென்று நாங்கள் துவக்கி வைத்தோம். மேலும் தமிழ்நாட்டில் பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாட்டின் கருத்துகளும் மிக சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள், எதிர்காலத்தில் தொற்று நோய்களால் ஏற்படும் அபாயங்கள், பல்வேறு வைரஸ் தாக்கங்கள் குறித்து அந்த மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த உபயோகமான மாநாட்டில் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

”வேர்ல்ட் ஒன் ஹெல்த் காங்கிரஸ்” மாநாடு குறித்து மா.சுப்பிரமணியன் பேட்டி

அந்த மாநாட்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்’ என்றார்.

இதையும் படிங்க:சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்!

Last Updated : Nov 11, 2022, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details