தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்றத்தில் சரணடைந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா...!

சென்னை: வருமான வரி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் திரும்பப்பெற்றது.

By

Published : Nov 21, 2019, 1:36 AM IST

studiogreen-producer-gnayanavelraja-surrendered-in-the-court

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக கேள்விகளைக் கேட்டு பதிவுசெய்யும் நடைமுறைக்காக ஞானவேல்ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், வருமானவரித்துறை தரப்புக் கோரிக்கையை ஏற்று எழும்பூர் நீதிமன்றம், ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, பிடிவாரண்டை திரும்பப் பெற கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிடிவாரண்டை திரும்பப் பெற்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நபரைத் தாக்கிய திமுக பிரமுகர்!

ABOUT THE AUTHOR

...view details