இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கால்நடை மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம்
சென்னை : கால்நடை மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்வதற்கு பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் 10. 6.2019 மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதில் 16.5.2019 வரை கால்நடை மருத்துவ பட்டப்படிப்பிற்கு 7,488 மாணவர்களும், பி.டெக் பட்டப்படிப்புகளுக்கு 1,268 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்திற்கு 10.6.2019 மாலை 5:45 மணி வரையில் அனுப்பலாம். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் ஜீன் கடைசி வாரத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜீலை இரண்டாம் வாரத்தில் நடைபெறும். கால்நடை மருத்துவப்படிப்பு மற்றும் கால்நடைத் தொழில் நுட்ப பட்டப்படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
அயல்நாடு வாழ் இந்தியர் , அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கான இடங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர கடைசி தேதி ஜூலை 1ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் வருமாறு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.