தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள்… தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு! - சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு

பொதுத் தேர்வினை எழுத வராத பள்ளி மாணவர்களின் விபரங்களை அன்றே தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், மாணவர்களின் பெற்றோர்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு அடுத்தத் தேர்வினை எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 17, 2023, 9:00 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழித்தாள், ஆங்கிலம் ஆகியப் பாடங்களுக்கான தேர்வினை தலா 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை.

கரோனா தொற்றுக்கு பின்னர் நடைபெறும் தேர்வு என்பதாலும், தேர்வின் மீது மாணவர்களுக்கு உள்ள அச்சம், 11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடத்தை 12ஆம் வகுப்பில் படிக்கும் போது எழுதுவதற்கு அச்சம் போன்றவை மாணவர்கள் தேர்வு எழுதாததற்கு காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால், வழக்கத்தை விட அதிகளவில் மாணவர்கள் தேர்வினை எழுதாமல் இருந்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

தேர்வினை எழுதாத மாணவர்களை பிறப் பாடங்களுக்கான தேர்வினை எழுத வைக்கவும், சிறப்பு துணைத் தேர்வினை எழுத வைக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கும் தேர்வினை அனைத்து மாணவர்களும் எழுத வைக்கவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு சார்ந்து 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் 'தேர்வுக்கு வராதவர்கள் எவரென கண்டறியப்பட வேண்டும்’.

இத்தேர்வின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்கும், அனைத்து தேர்வர்களும் தேர்வினை எதிர்கொள்வதற்கும், துணைத் தேர்வு சிறப்பு பயிற்சி மையம் ஏற்பாடு செய்வதற்கும் கண்காணிக்கவும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மார்ச் 24 (திங்கட்கிழமை) மற்றும் ஏப்ரல் 10,24 ஆகியத் தேதிகளில் மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை அவசியம் நடத்த அறிவுறுத்தப்படுகிறது.

தலைமயாசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்: பொதுத்தேர்விற்காக பதிவு செய்யப்பட்ட மாணவர்களில் (Nominal Roll) நீண்ட நாட்களாக விடுப்பில் இருப்பின் அவர்கள் குறித்த விவரங்களை உரிய பள்ளி தலைமையாசிரியர்கள் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு முன்னரே தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பதிவு செய்த மாணவர் பெயர் பட்டியலை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அளிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர்ப் பட்டியலை சேகரித்து அந்த மாணவர்களை பள்ளியில் நடைபெறும் சிறப்புப் பயிற்சி மையங்களுக்கு வரவழைத்து பயிற்சியில் பங்கேற்பதை பள்ளி மேலாண் மைக்குழு உறுதி செய்தல் வேண்டும்.

பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில், தேர்வு நேரம் முடிந்தவுடன் அன்று மதியமே தேர்விற்கு வராத மாணவர்களின் விவரங்கள் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரால் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்த மாணவர்கள் சார்ந்த விவரங்களை அறிந்து கொண்டு உடனே அடுத்து வரும் தேர்விற்கு மாணவர்கள் தவறாது வருகைப் புரிவதை தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வட்டார மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொதுத் தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்கள் அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கான ஆலோசனைகளை தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பெற்றோர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு:பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் பட்டியலை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பெற்று , அந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் துணைத் தேர்விற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து தேர்வு எழுத வைக்க வேண்டும். மேலும் கூடுதல் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் சார்ந்த மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்போடு பிற துறைகளின் பங்களிப்பை பெறுதல் வேண்டும்.

துணைத் தேர்வு குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் சத்தேகங்களை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள 14417 இலவச உதவி மைய எண் பயன்படுத்தலாம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "நாட்டின் மெகா திட்டங்களை விரைவுபடுத்துவதில் அயலகப் பணியாளர்கள் முக்கியப்பங்கு": ஐஐடி ஆய்வு சொல்வது என்ன?

ABOUT THE AUTHOR

...view details