தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் படிப்பு முதல் சுற்று கலந்தாய்வு - சுமார் 10ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு முதல் சுற்றுக் கலந்தாய்வில் 10340 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் அப்வார்டு மூவ்மென்ட் மூலம் 3046 இடங்களை பெற்றுள்ளனர்.

பொறியியல் படிப்பு முதல் சுற்று கலந்தாய்வில் 10,340 மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கை
பொறியியல் படிப்பு முதல் சுற்று கலந்தாய்வில்http://10.10.50.85:6060/finalout4/tamil-nadu-nle/thumbnail/25-September-2022/16469450_thumbnail_3x2_engg.jpg 10,340 மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கை

By

Published : Sep 25, 2022, 9:15 PM IST

சென்னை:தமிழ்நட்டில் பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக 11ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 1,56,278 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவ 17ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

முதல் சுற்றுக் கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில்பிரிவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்.15 ஆம் தேதி நடைபெற்றது. 10, 11, 12ஆகிய தேதிகளில் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலை பூர்த்தி செய்தனர். தற்காலிக ஒதுக்கீடு 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. 13, 14ஆம் தேதிகளில் மாணவர்கள் தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிச் செய்தோ அல்லது வேறு கல்லூரியில் சேர்வதற்கான விருப்பத்தையோ பதிவு செய்தனர்.

முதல் சுற்றுக் கலந்தாய்வில் பொதுப்பிரிவில் 14,524 பேரில் 13893 பேர் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்தனர். அவர்களில் 12,996 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 5,887 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர். 3707 மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாகவும், மேலே விரும்பிய இடத்தில் சேரவும், காலியிடம் கிடைத்தால் அளிக்கவும் எனக் கூறியிருந்தனர்.

இடங்களை தேர்வு செய்தவர்கள் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்ந்தனர். விரும்பும் இடம் கிடைத்தால் மாற்றிக்கொள்ள தயார் எனக் கூறியவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தினர். விரும்பிய இடத்திலோ அல்லது புதிய இடத்திலோ சேர விரும்பியவர்களுக்கான ஒதுக்கீடு 25ஆம் தேதி செய்யப்பட்டன. அதில் 3046 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முதல்கட்ட கலந்தாய்வின் மூலம் 10,340 பேருக்கு பொறியியல் படிப்பிற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021-22ம் ஆண்டு மாணவர் சேர்க்கை முதல்சுற்றுக் கலந்தாய்வில் , 10148 இடஙகள் நிரப்பப்பட்டன. அதில் 1312 பேர் அப்வார்டு மூவ்மென்டில் 12.93 சதவீதம் பேர் இடங்களை பெற்றனர். 2022-23 நடப்பாண்டில் 10340 பேருக்கு ஒதுக்கீடு செய்ததில், 3046 பேர் அப்வார்டு மூப்மென்டில் 29.46 சதவீதம் பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, 2ஆம் சுற்றுக் கலந்தாய்வு செப்.25ஆம் தேதி முதல் அக்.13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு தரவரிசைப் பட்டியிலில் 14525 முதல் 45577 வரை இடம் பெற்றுள்ளவர்கள் கலந்துக் காெள்ளலாம். விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை 27ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். 28ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படும். 29,30 தேதிகளில் மாணவர்கள் உறுதிச் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடுகளைத் தடுக்க பணியாளர்களை மாற்றம் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details