இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலைப் பட்டப்படிப்பில் 2021-22ஆம் கல்வியாண்டில், முதுநிலை மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதற்கு www.tngasapg.in , www.tngasapg.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதிவரையில் பதிவு செய்யலாம்
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.