சென்னை: ஆவடி அடுத்த கன்னடபாளையம், ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் தமிழ்மாறன் (18). இவன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி.ஐயில் முதலாண்டு படித்து வருகிறான். இந்நிலையில் இன்று தமிழ்மாறன் வகுப்பு முடிந்தவுடன் ஆவடி பஸ் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து வீட்டுக்குச்செல்ல தடம் எண்.61 கே என்ற மாநகரப் பேருந்தில் ஏறியுள்ளான்.
அப்போது, அவன் படிக்கட்டில் இருந்து கால் தவறி கீழே விழுந்து உள்ளான். இதில், அவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடினான். இதனையடுத்து, அவனை அக்கம்பக்கத்தினர் ஆட்டோ மூலம் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.