தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை’ - Strict action will be taken against those who put up posters

சென்னை பேருந்து நிறுத்த நிழற்குடைகள், அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள சுவர்களில், சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையர்  சென்னை மாநகராட்சி ஆணையர்  ககன்தீப் சிங்  ககன்தீப் சிங் பேடி  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படு என ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்  சென்னை செய்திகள்  சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை  chennai news  chennai latest news  chennai corporation  gagandeep singh bedi  Chennai Corporation Commissioner  Chennai Corporation Commissioner gagandeep singh bedi  Strict action will be taken against those who put up posters  posters
சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை

By

Published : Jul 8, 2021, 7:46 PM IST

சென்னை: இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பொது இடங்களில் (அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள்) ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் அகற்றிவருகின்றனர்.

மேலும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகள், தெருக்களின் பெயர் பொறித்த பலகைகள், அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்பணிகள் மாநகராட்சிப் பொறியியல், வருவாய்த் துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

மேலும் மாநகராட்சியின் சார்பில் சுவரொட்டிகளை அகற்றும் வகையில், நாள்தோறும் ஒவ்வொரு மண்டலத்திலும் பேருந்து செல்லும் ஐந்து சாலைகளைத் தேர்வுசெய்து, அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் முழுவீச்சில் அகற்றப்பட உள்ளன.

பொதுமக்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அது குறித்த தகவல்களை மாநகராட்சியின் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாராகத் தெரிவிக்கலாம்.

மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி, சென்னை மாநகரைச் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எந்திரன் படக்கதை காப்புரிமை பிரச்னை: ஆரூர் தமிழ்நாடான் மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details