சென்னை: வளர்ந்து வரும் நாடுகளில் கால்நடை மருத்துவ தோல் நோய் சிகிச்சை, கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துதல் குறித்த பன்னாட்டு மாநாடு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது.
இந்திய கால்நடைத்தோல் மருத்துவ சங்கத்தின் தொடக்க மாநாடு மற்றும் கருத்தரங்குகள், தோல்நோய் சிகிச்சை முறைகளுக்கான இந்த விளக்க மாநாட்டில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைத்துறை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து கருத்தரங்கு மலரை வெளியிட்டு, பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 'தமிழ்நாடு தோல் பொருட்கள் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கால்நடை மருத்துவர்களுக்கு பல்வேறு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மருத்துவத்துறையில் தோல் மருத்துவ பிரிவில் நவீன சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டு நாய்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின நாய் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’எனத் தொிவித்தார்.
இதையும் படிங்க:கழிவுநீர்த்தொட்டிகளில் மனிதர் இறங்காமல் சுத்தம் செய்வதற்கான சென்னை ஐஐடியின் ரோபோ!