சென்னை: அரும்பாக்கம் பிரசாத் கார்டன் பகுதியில் ஃபெட் பேங்க் கோல்ட் வங்கியில் ரூ.20 கோடி மதிப்புடைய தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நான்கு தனிப்படைகளை அமைத்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள வங்கி உதவி மேலாளர் ஒருவர் வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் வங்கியில் உதவி மேலாளராகப்பணியாற்றி வருபவர் விஜயராஜன். இவர் அரும்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று (ஆக.13) குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு பின்பு வீட்டிற்கு வந்தார்.