சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், "ஜூகிபா" என்ற தலைப்பில் தான் எழுதிய நாவலை இயக்குநர் ஷங்கர் திருடியுள்ளதாக, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவான குற்ற வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், 'எந்திரன்' படத்தின் கதைக்காக இயக்குநர் ஷங்கரிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்தது.