கடந்த 2017ஆம் ஆண்டு மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தின் படி தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
காட்டுயிர் நிழற்பட வல்லூநர் சேஷன் என்பவர் தொடுத்த இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக அதிகளவில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்று வருகிறது.
நாட்டு மாடுகளில் உள்ள 'திமில்' பெரிதாக இருப்பதால் மாடு பிடி வீரர்கள் கீழே விழுந்து காயமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், மிக சிறிய 'திமில்' கொண்ட வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளை பிடிக்கும் வீரர்கள் சுலபமாக கீழே விழுந்து காயமடைகிறார்கள்.
ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்கக் கோரி வழக்கு! நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கேட்கிறோம்’ என வாதிடப்பட்டது.
நாட்டு மாடுகள் கொண்டு இல்லாமல் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளை பங்கேற்க வைத்து விலையு உயர்ந்த கார் போன்ற பரிசுகளை மாட்டின் உரிமையாளர் பெற்றுக்கொள்வது சட்ட விரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதிரொலி டிஎன்பிஎஸ்சியில் அதிரடி மாற்றங்கள்!