தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள், தடையை நீட்டித்து உத்தரவு!

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai HC

By

Published : Aug 1, 2019, 4:57 PM IST

சேலத்தைச் சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமின், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை, தபால் வாக்கு செலுத்துவதும் விருப்பத்தின் அடிப்படையில் தான், அதுவும் கட்டாயம் கிடையாது.

மேலும், தபால் வாக்கு படிவம் தேர்தலுக்கு முதல் நாள் வரை வழங்கப்படவில்லை. தபால் மூலமும், நேரடியாகவும் வாக்களிக்க முடியாத நிலை பல உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேபோல் ஏழுமலை என்பவர் தொடர்ந்த வழக்கில், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இந்தத் தேர்தலை நடத்தியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டார். ஏற்கனவே நடிகர் விஷால் தொடர்ந்த ரிட் வழக்கில் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டாலும், முடிவுகளை வெளியிடக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விஷால் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details