சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 18 மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் 3 வயது முதல் 30 வயது வரையிலான பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் சென்னை சிலம்பம் பள்ளி சார்பில் 14 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.