தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் அதிநவீன பாலங்கள் - டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது - விமானங்களில் பயணி ஏறி இறங்குவதற்கு பாலம்

சென்னை விமானநிலையத்தில் 'பேசஞ்சா் போர்டிங் பிரிட்ஜ்' என்ற அதிநவீன பாலங்கள் 15 கட்டப்பட்டு வருகின்றன. அதில் 7 பாலங்கள் வரும் டிசம்பரில் பயணிகள் பயன்பாட்டிற்கு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் அதிநவீன பாலங்கள்- டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன பாலங்கள்- டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது

By

Published : Nov 2, 2022, 10:04 PM IST

சென்னை:விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச நவீன முனையத்தில், விமானங்களில் பயணிகள் ஏறி, இறங்குவதற்கு 'பேசஞ்சா் போர்டிங் பிரிட்ஜ்' என்ற 15 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த 'பேசஞ்சா் போா்டிங் பிரிட்ஜ்' விமானநிலையத்தின் நுழைவுப்பகுதியிலிருந்து நேரடியாக விமானத்தின் வாசலுக்கு செல்லும் விதத்தில் அமைக்கப்படுகின்றன. இந்தப் பாலங்கள் 15ல் 7 பாலங்கள் 47 மீட்டா்கள் நீளமுடையவைகள். மேலும் 7 பாலங்கள் 32 மீட்டரிலிருந்து 40 மீட்டா்கள் உடையவை. மற்றொரு பாலம் 32 மீட்டா் உடையது.

முதல் கட்டத்தில் 47 மீட்டா் நீளமுடைய 7 பாலங்கள், பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இந்த நவீன இணைப்புப் பாலத்தில், நகரும் பாலங்கள் இரண்டு அமைகின்றன. அதில் அதிக நீளமுடைய 47 மீட்டா் பாலங்கள் 7 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த 7 பாலங்களும் வரும் டிசம்பரில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும். மற்ற 8 பாலங்கள் அடுத்த இரண்டாவது கட்டத்தில் கட்டப்பட்டு, செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது.

இந்தப் பாலங்கள் மேக் இன் இந்தியா திட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்ற நவீன பாலங்கள் இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமானநிலையத்தில் அமைக்கப்படுகின்றன.

நீளமான இந்த இணைப்புப்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின்பு, சென்னை விமான நிலையத்தில் விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

இதையும் படிங்க:'சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் இன்று மாலைக்குள் நீர் வெளியேற்றப்படும்'

ABOUT THE AUTHOR

...view details