தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு மறுசீரமைப்பு

தமிழ்நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், அதிகப்படுத்தவும் ஏற்றுமதி மேம்பாட்டு மறுசீரமைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Export Development Board Restructuring  Export Development  Export  State Level Export  State Level Export Development Board Restructuring  chennai news  chennai latest news  ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு மறுசீரமைப்பு  ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு  மாநில அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு  மாநில அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு மறுசீரமைப்பு  சென்னை செய்திகள்  ஏற்றுமதி
அரசாணை

By

Published : Oct 28, 2021, 4:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் ஏற்றுமதியை நாட்டிலேயே அதிகப்படுத்தி, ஏற்றுமதி திறனை அதிகரிக்க ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை என்ற வரைவு வெளியிடப்பட்டது. இந்த ஏற்றுமதி மேம்பாட்டு குழு, தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு தலைவராக கொண்டு, தொழிற்துறை முதன்மை செயலாளர், நிதிதுறை கூடுதல் செயலாளர், மீன்வளம், கால்நடை துறை செயலாளர், கைத்தறி, காதி கிராப்ட் கைவினைப்பொருட்கள் செயலாளர், சிறு குறு துறைகளின் செயலளார் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இக்குழுவின் உறுப்பினர்கள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கூடி தலைமை செயலாளருக்கு அறிக்கை அளிக்கவும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூடி ஏற்றுமதி தொடர்பான ஆலோசனை மேற்கொண்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பார்கள்.

தளவாடங்கள், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான பிரச்னைகளை கண்டறிந்து உரிய தீர்வு காணவும், கடல்சார் உணவுகள், தமிழ்நாடு பாரம்பரிய பொருட்கள், கைவினை பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்டவை அதிகப்படுத்துவது குழுவின் முக்கிய நோக்கமாகும்.

அதே போல் ஒன்றிய அரசு நிதி பங்களிப்பு தொடர்பாக ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: IIT நுழைவுத் தேர்வில் வென்ற ஏழை மாணவனின் கல்விச் செலவை அரசு ஏற்கும் - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details