சென்னை:புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஜன.16ஆம் தேதி விளக்க கூட்டத்திற்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அழைப்பு கொடுத்திருந்தது.
அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்ச கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் மாநிலத் தேர்தல் ஆணையம் அனுப்பிய இந்த கடிதம் ஈபிஎஸ் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அழைப்பு கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால் அதிமுக தலைமையகத்தின் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருப்பி மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தனர். மாநில தேர்தல் ஆணையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட கடிதத்தை மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் தபால் மூலம் அனுப்பியுள்ளது. இதில், மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பியுள்ளது.