தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு: 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின் - நீட் தேர்வு

நீட் தேர்வு பாதிப்பு குறித்த ஏ.கே. ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை, கேரளா உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சருக்கு அனுப்பி வைத்து, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

நீட் தேர்வு: 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்
நீட் தேர்வு: 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்

By

Published : Oct 4, 2021, 12:57 PM IST

Updated : Oct 4, 2021, 2:03 PM IST

சென்னை:நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது எனக்குறிப்பிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், " மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே எங்களது நிலைப்பாடாகும்.

இது தொடர்பாக, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையைத் தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டுமென்று நாங்கள் கருதுகிறோம்.

இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து, கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாவதைத் தடுக்கவும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் உங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த முக்கியமான பிரச்னையில் அனைவரது ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட தரமற்ற சக்கர நாற்காலி - அரசு பதிலளிக்க உத்தரவு

Last Updated : Oct 4, 2021, 2:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details