தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக்கிடுக!’ - ஸ்டாலின்

சென்னை: அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின்

By

Published : Jun 5, 2019, 9:45 AM IST

காயிதேமில்லத்தின் 124ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி மசூதி வளாகத்தில் அமைந்திருக்கக்கூடிய அவருடைய நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காயிதேமில்லத்தின் பிறந்தநாளும் ரமலான் திருநாளும் ஒரே நாளில் இணைந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது மத்தியில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க அவர் குரல் கொடுத்ததாகவும் நினைவுகூர்ந்தார்.

ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

அதேபோல், இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருவதாக குற்றம்சாட்டிய அவர், அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழ் மொழியை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details