இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த முறை முத்தலாக் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது “இது பாஜகவின் கம்யூனல் அஜெண்டா” என்று கடுமையாகத் தாக்கிப் பேசியவர் அதிமுகவின் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முத்தலாக் மசோதாவில் உள்ள சிறை தண்டனை குழந்தைகளுக்கு வாழ்வாதார நிதி உள்ளிட்ட காரணங்களுக்காக எதிர்ப்பதாகக் கூறினார். ஆனால் தற்போது ஆட்சியைத் தக்கவைக்க முத்தலாக் மசோதாவுக்கு அதிமுகவினர் ஆதரவளித்துள்ளனர் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
'இன்னொரு பாஜகவாக மாறி வரும் அதிமுக' - ஸ்டாலின் காட்டம் - பாஜக
முத்தலாக், தகவல் பெறும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு முன் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தற்போது ஆதரவளிக்கும் அதிமுக தமிழ்நாட்டில் பாஜகவின் மறுபதிப்பாக மாறிவருவதாகத் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதுமட்டுமல்ல தகவல் பெறும் உரிமைச் சட்டம், மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்டத் திருத்தம் உள்ளிட்டவற்றுக்கும் தற்போது ஆதரவளித்திருப்பதன் மூலம் அதிமுக தமிழ்நாட்டில் பாஜகவின் மறுபதிப்பாக மாறிவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள இவர், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும் பதிவியில் நீடிக்கவும் அதிமுக இவ்வாறு செயல்படுவதாகவும், இனியும் மக்களை ஏமாற்றாமல் முதலமைச்சரும் துனை முதலமைச்சரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டுவிடலாம் என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.