திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் வேகமாக பரவிவரும் கரோனா தொற்றை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், தனது இல்லத்தில் வைத்து சுகாதாராத் துறை செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் நேற்று (மே 3) மாலை ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த செய்தி குறிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்த தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர், வருவாய்த்துறைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கட்டுப்பாடுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும் அதன்மூலம் மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனால் இதனை அனைத்துக் துறைகளும் சிறப்பாகக் கண்காணித்துச் செயல்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.