தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இணையத்தின் வழியாக திமுகவில் 5 லட்சம் பேர் இணைந்தனர்' - மு.க. ஸ்டாலின் - திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை

சென்னை: இணையத்தின் வழியாக திமுகவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

stalin  5 lakh members are joined in DMK  dmk online membership count  dmk online mebership
'இணையத்தின் வழியாக திமுகவில் 5 லட்சம் பேர் இணைந்தனர்' - மு.க. ஸ்டாலின்

By

Published : Sep 26, 2020, 8:53 PM IST

திமுக இணையத்தின் வழியாக எல்லாரும் நம்முடன் என்ற பரப்புரையை முன்னெடுத்திருந்தது. இதன் மூலம் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் பணியை திமுக கட்சி உறுப்பினர்கள் செய்துவந்தனர். இந்நிலையில், இதுதொடர்பான ட்வீட்டை மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

அதில், "எண்திசையிலிருந்தும் இணையம் வழியாக நம்மை நோக்கி வரும் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. எல்லோரும் நம்முடன் இணையும் இத்தருணம் 'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!' எனும் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை மனதில் கொண்டு இனமானப் படை வீறுநடை போடட்டும்!" எனக்குறிப்பிட்டிருந்தார்.

அதனுடன் இணைக்கப்பட்ட வீடியோவில், அனைத்து தரப்பினருக்குமான வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதையும் படிங்க:'72 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேரை திமுகவில் இணைத்துள்ளோம்!' - எம்.எல்.ஏ அன்பரசன்

ABOUT THE AUTHOR

...view details