தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

NEET = 0; நீட் தேர்வின் பலன் '0' தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்! - cut off reduced to zero

NEET PG 2023 cut off reduced to zero: NEET யில் உள்ள Eligibilityக்குப் அர்த்தம் கிடையாது என அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என தன் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

NEET = 0; நீட் தேர்வின் பலன் '0' தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்!
NEET = 0; நீட் தேர்வின் பலன் '0' தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 4:56 PM IST

சென்னை:நீட் தேரிவில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் NEET மூலம் உயிர்களை பரிப்பதற்காகவே பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும் என தன் x தலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன் x தலத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “நீட் தேர்வின் பலன் '0' தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது!. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் '0' என்று வரையறுப்பதன் மூலமாக National Eligibility Cum Entrance Test என்பதில் உள்ள Eligibilityக்குப் அர்த்தம் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது. NEET = 0. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். NEET என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "தோல்வி பயம் பாஜகவுக்கா?.. கனிமொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதா...? வெற்று அறிக்கை மட்டும் வெளியிடுவதா.."- வானதி சீனிவாசன்!

ABOUT THE AUTHOR

...view details