தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும் காவல் துறையும் எடுத்து வருகிறது. போதைப் பொருள்களின் புழக்கத்தை தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
மேலும் பள்ளி, கல்லூரிகளின் அருகில் போதை பொருள் விற்பதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், எந்த விதத்திலும் போதை பொருள் தமிழ்நாட்டில் ஊடுருவ கூடாது என்றும் இதற்காக மாநில, மாவட்ட எல்லைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் சோதனை சாவடிகளை பலப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.