தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”திமுக சொல்லி கேட்க விரும்பாமல் கருத்துக்கேட்பு நாடகம் நடத்தும் அரசு” - ஸ்டாலின் தாக்கு

சென்னை : திமுக சொல்லி பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கவில்லை எனக் காட்டுவதற்காக அதிமுக அரசு, பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக்கேட்பு நாடகம் நடத்தவிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Nov 5, 2020, 5:18 AM IST

Updated : Nov 5, 2020, 5:48 AM IST

கரோனா பொது முடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

தொடர்ந்து நேற்று (நவ.04), மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வருகிற நவம்பர் 9ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் நடைபெறும் எனவும், இக்கூட்டங்களில், 9,10,11,12ஆம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ”திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவில்லை எனக் காட்டுவதற்காக அதிமுக அரசு கருத்துக் கேட்பு நாடகம் நடத்துகிறது” என சாடியுள்ளார்.

”மேலும், ஆந்திராவில் பள்ளிகள் திறப்பால் ஆசிரியர், மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவி இருப்பது குறித்து அரசுக்குத் தெரியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Last Updated : Nov 5, 2020, 5:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details