தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசுப் பணிகளில் காவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - அசாம் ரைபிள்ஸ் படை

மத்திய ஆயுதப் படை, என்ஐஏ, எஸ்.எஸ்.எஃப். காவலர் தேர்வுகளுக்குத் தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்க மத்தியப் பணியாளர்கள் தேர்வாணையம் அழைப்புவிடுத்துள்ளது.

அரசு பணிகளில் காவலர் தேர்வு
அரசு பணிகளில் காவலர் தேர்வு

By

Published : Jul 20, 2021, 7:58 PM IST

Updated : Jul 20, 2021, 10:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மத்திய ஆயுத படைகள் (CAPFs), தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை ஆகியவற்றில் காவலர் (பொதுப் பணி) மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில், ரைபிள் மேன்( பொது பிரிவு) பணிகளுக்கான, 2021ஆம் ஆண்டு தேர்வுகள் குறித்து, மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடுள்ளது.

மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ssc.nic.in இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31.

மொத்த காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்த விபரங்கள் பணியாளர் தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

தெற்கு பிராந்தியத்தில் முதலாம் அடுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி வேலூர் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா 0 உள்ளிட்ட 21 இடங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க:பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Last Updated : Jul 20, 2021, 10:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details