தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை

7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை
7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை

By

Published : Aug 14, 2021, 2:09 PM IST

Updated : Aug 14, 2021, 4:31 PM IST

13:58 August 14

விழிஞ்சம் ஹெராயின் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி படகு மூலம் கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்து, இலங்கையைச் சேர்ந்த ஆறு நபர்களை கைது செய்தனர். 

இச்சம்பவம் குறித்து விழிஞ்சம் காவல்துறையினர் ஏப்ரல் 5ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து மே மாதம் 1 ஆம் தேதி  இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் கடந்த 2 ஆம் தேதி இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட சுரேஷ் மற்றும் சௌந்தரராஜன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் விசாரணை

இந்நிலையில் இன்று (ஆக.14) இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

குறிப்பாக சென்னை வளசரவாக்கம் முரளி கிருஷ்ணா நகர் தாஜ் டவரில் உள்ள சபேசன் (46) என்ற இலங்கைத் தமிழர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் ஐந்து அலுவலர்கள், வளசரவாக்கம் காவல்துறையினர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். 

இந்தச் சோதனையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் செல்போன், சிம் கார்டுகள், டேப்லட் உள்ளிட்ட ஏழு டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சூழலியல் முன்னெடுப்புகளில் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழும்'

Last Updated : Aug 14, 2021, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details